search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஜூன் 16 வரை ஜார்கண்டில் ஊரடங்கு நீட்டிப்பு

    ஜார்க்கண்ட்டில் 23 மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு காலை 6 மணி முதல் 4 மணி வரை கடைகளை திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு ஜூன் 16-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக நேற்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    அங்கு ஏப்ரல் 22-ந்தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு. ஒவ்வொரு வாரமும் புதிய நெறிமுறைகளும், ஊரடங்கு நீட்டிப்பும் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது 5-வது முறையாக மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    பேரிடர் மேலாண்மை குழுவினருடன், முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், ஆலோசனை நடத்திய பின்பு, இது பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

    அங்கு 23 மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு காலை 6 மணி முதல் 4 மணி வரை கடைகளை திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிகம் பாதிப்பு உடைய ஜாம்செட்பூரிலும், பகல் 2 மணி வரை கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் அங்கு சனிக்கிழமை மாலை 5 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு பின்பற்றப்படுகிறது.

    ஜார்கண்டில் நேற்று புதிதாக 603 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மொத்தம் 5 ஆயிரத்து 99 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    Next Story
    ×