search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர்
    X
    வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர்

    காரிப் பருவ பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு -மத்திய மந்திரிசபை ஒப்புதல்

    ரெயில்வே துறையில் 5ஜி இணையதள சேவை வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. காணொளி வாயிலாக நடைபற்ற இக்கூட்டத்தில், காரிப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பயிர்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்த ஒப்பதல் வழங்கப்பட்டிருக்கிறது.

    மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறியதாவது:-

    2021-22ம் நிதியாண்டில் நெல்லுக்கான (சாதாரண ரகம்) குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 72 ரூபாய் உயர்த்த மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு குவிண்டால் ரூ.1868ல் இருந்து ரூ.1940 ஆக உயர்த்தப்படுகிறது. எள் குவிண்டாலுக்கு 452 ரூபாயும், துவரை மற்றும் உளுந்து ஆகியவை தலா ரூ.300 உயர்த்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரகாஷ் ஜவடேகர்

    ரெயில்வே துறையில் 5ஜி இணையதள சேவை வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. 5ஜி சேவை மற்றும் சிக்னல் நவீனமயமாக்கல் என ரெயில்வே துறையை நவீனமாக்க அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.25 ஆயிரம் கோடி செலவிடப்படும் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
    Next Story
    ×