search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல்
    X
    பெட்ரோல்

    கர்நாடகத்தில் 100-ஐ தாண்டிய பெட்ரோல் விலை

    பெங்களூருவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.57 காசுவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் பெங்களூருவிலும் பெட்ரோல் விலை ரூ.100-யை தாண்டி விட வாய்ப்புள்ளது.
    பெங்களூரு :

    பெட்ரோல், டீசல் விலையை தினசரி விலை நிர்ணயம் என்ற நடைமுறை அமல்படுத்தியதில் இருந்து, அவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனா ஊரடங்கு மத்தியிலும் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பெட்ரோல் விலை ரூ.100-யை தாண்டி உள்ளது.

    இந்த நிலையில், கர்நாடகத்தில் சில மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டி இருக்கிறது. அதன்படி, உத்தரகன்னடா மாவட்டம் சிர்சியில் நேற்று ரூ.100.22 காசாக பெட்ரோல் விலை இருந்தது. இதுபோல், பல்லாரி மாவட்டத்தில் ரூ.100.08 காசுவுக்கும் விற்பனை செய்யப்பட்டது. சிக்கமகளூருவிலும்
    பெட்ரோல்
    விலை ரூ.100-யை தாண்டி இருந்தது.

    இந்த நிலையில், பெங்களூருவில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.57 காசுவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் பெங்களூருவிலும் பெட்ரோல் விலை ரூ.100-யை தாண்டி விட வாய்ப்புள்ளது. இதுபோல், டீசல் விலையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. பெங்களூருவில் நேற்று ஒரு லிட்டர் டீசல் ரூ.91.47 காசுவுக்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×