search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    28 மாநிலங்களில் 28,252 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு

    இந்தியா, 141 நாட்களில் மொத்தம் 23 கோடி டோஸ் தடுப்பூசி போட்டுள்ளது. வேகமாக தடுப்பூசி போடுவதில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது.
    புதுடெல்லி:

    கொரோனா விவகாரம் தொடர்பான மந்திரிகள் குழுவின் உயர்மட்ட கூட்டம் நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில், மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் பேசியதாவது:-

    28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கருப்புபூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 28 ஆயிரத்து 252 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 86 சதவீதம் பேர் கொரோனாவால் தாக்கப்பட்டவர்கள். 62.3 சதவீதம் பேர் நீரிழிவு நோயாளிகள் ஆவர்.

    அதிக அளவாக, மராட்டிய மாநிலத்தில் 6 ஆயிரத்து 339 பேரும், குஜராத்தில் 5 ஆயிரத்து 489 பேரும் கரும்பூஞ்சையால் தாக்கப்பட்டுள்ளனர்.

    இந்தியா, 141 நாட்களில் மொத்தம் 23 கோடி டோஸ் தடுப்பூசி போட்டுள்ளது. வேகமாக தடுப்பூசி போடுவதில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது. உலக அளவில் மொத்தம் 88 கோடியே 70 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில், இந்தியாவில் மட்டும் 17 கோடியே 90 லட்சம் பேருக்கு போடப்பட்டுள்ளது. இது, உலக அளவில் 20.2 சதவீதமாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×