search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பெட்ரோல் விலையைத் தொடர்ந்து ராஜஸ்தானில் டீசலும் ரூ.100-ஐ நெருங்கியது

    நாட்டில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், மராட்டியம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களிலும், லடாக் யூனியன் பிரதேசத்தில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.100-ஐ தாண்டியுள்ளது.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலைகள் கிடுகிடுவென்று ஏற்றம் கண்டு வருகின்றன. கடந்த மே 4-ந்தேதியில் இருந்து 21-வது முறையாக நேற்று பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டன.

    பெட்ரோல் விலை லிட்டருக்கு 28 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 27 பைசாவும் உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஒருபுறம் இருக்க, மாநிலத்துக்கு மாநிலம் அவற்றின் விலையும் வேறுபடுகின்றன. அந்தந்த மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில் விதிக்கப்படும் வாட், சரக்கு கட்டணத்தைப் பொறுத்து விலை மாறுபாடு இருக்கிறது.

    நாட்டில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், மராட்டியம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களிலும், லடாக் யூனியன் பிரதேசத்தில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.100-ஐ தாண்டியுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோலை தொடர்ந்து டீசலும் ரூ.100-ஐ நெருங்கியுள்ளது. அங்கு பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கங்காநகர் மாவட்டத்தில் டீசல் விலை லிட்டர் ரூ.99.24-ஐ தொட்டுள்ள நிலையில், பெட்ரோல் லிட்டர் ரூ.106.39-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாட்டிலேயே இங்குதான் பெட்ரோல், டீசல் விலை அதிகம்.
    Next Story
    ×