search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப் படம்
    X
    கோப்புப் படம்

    அரியானாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14 வரை நீட்டிப்பு

    கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து வருகின்றன.
    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் கொரோனா-வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இன்று அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு மேலும் ஒரு வாரத்திற்கு வரும் 14-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளுக்கு அரியானா மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

    இதன்படி, காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மால்கள் திறக்க அனுமதிக்கப்படும். ஒரே நேரத்தில் அதிகபட்சம் 21 பேர் வரை மத இடங்களில் ஒன்றுகூடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணங்கள் மற்றும் இறுதிச்சடங்குகளில் 21 பேர் வரை பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 50 சதவீத இருக்கை வசதியுடன் உணவகங்கள், பார்கள் மற்றும் கிளப் வீடுகள் திறக்க அனுமதிக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×