search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக முதல்வர் எடியூரப்பா
    X
    கர்நாடக முதல்வர் எடியூரப்பா

    எடியூரப்பா பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை... வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தலைவர்கள்

    கட்சி மேலிடம் கூறினால் உடனடியாக பதவியை ராஜினாமா செய்வேன் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
    பெங்களூரு:

    கர்நாடகாவில் முதல் மந்திரி எடியூரப்பாவை கட்சி மேலிடம் மாற்ற விரும்புவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகின. இது குறித்து முதல் முறையாக மவுனம் கலைத்த எடியூரப்பா, கட்சி மேலிடம் கூறினால் உடனடியாக ராஜினாமா செய்வேன் என்றார்.

    இது தொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர், ‘இங்கே பாஜகவில் மாற்று தலைமை இல்லை என நான் கருதவில்லை. கட்சியின் உயர்மட்ட தலைமை கூறும் வரை நான் முதல் மந்திரியாக நீடிப்பேன். அவர்கள் எப்போது சொல்கிறார்களோ அப்போது பதவி விலகுவேன்’ என்றார். 

    துணை முதல்வர் டாக்டர் சி.என்.அஷ்வத்நாராயணன்

    எடியூரப்பாவைத் தொடர்ந்து துணை முதல்வர் டாக்டர் சி.என். அஷ்வத்நாராயணன் மற்றும் வருவாய்த்துறை மந்திரி அசோக் ஆகியோரும் இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். 

    துணை முதல்வர் டாக்டர் சி.என்.அஷ்வத்நாராயணன் கூறும்போது, ‘எடியூரப்பா பதவி விலகுவார் என்ற கேள்விக்கே இடமில்லை. அதுபோன்ற விவாதங்கள் எதுவும் நடக்கவில்லை. அவர் கட்சியின் ஒழுக்கமான சிப்பாய் என்பதால், கட்சி எடுக்கும் எந்த முடிவையும் ஏற்கத் தயாராக இருக்கிறேன் என்ற கருத்தை மட்டும் வெளியிட்டார்’ என்றார்.

    கர்நாடகாவில் தலைமை மாற்றம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் இது என்று வருவாய்த்துறை மந்திரி அசோக் கூறினார். எடியூரப்பா எங்கள் தலைவர், அவர் தொடர்ந்து முதல்வராக இருப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×