search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மத்திய அரசு 24.30 கோடி தடுப்பூசி வினியோகம் / மாநிலங்களிடம் 1.65 கோடி ‘டோஸ்’ இருப்பு

    மத்திய அரசு, உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை ஜனவரி 16-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது.
    புதுடெல்லி:

    நாடு கொரோனாவின் 2-வது அலையை வீழ்த்துவதற்காக பல வழிகளிலும் போராடி வருகிறது.

    இந்த வகையில் மத்திய அரசு, உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை ஜனவரி 16-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் முன்னுரிமை பயனாளிகளுக்கு இலவசமாகவும், 18-44 வயதினருக்கு மாநிலங்கள் கொள்முதல் திட்டத்தின்கீழ் விலைக்கும் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்குகிறது.

    இதுவரை 24 கோடியே 30 லட்சத்து 9 ஆயிரத்து 80 ‘டோஸ்’ தடுப்பூசிகள், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 22 கோடியே 65 லட்சத்து 8 ஆயிரத்து 508 ‘டோஸ்’கள் பயன்படுத்தப்பட்டு விட்டன.

    இதையடுத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் 1 கோடியே 65 லட்சத்து 572 ‘டோஸ்’ தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இந்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று ஒரு அறிக்கை வாயிலாக வெளியிட்டது.
    Next Story
    ×