search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி.
    X
    ஜி.எஸ்.டி.

    தொடர்ந்து 8-வது மாதமாக ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது - மத்திய அரசு தகவல்

    தொடர்ந்து 8 மாதங்களாக மொத்த ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சம் கோடியை கடந்திருக்கிறது. அதேநேரம் சிறு வணிகர்கள் ஜி.எஸ்.டி. தாக்கலுக்காக இந்த மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் வசூலிக்கப்பட்டு வரும் ஜி.எஸ்.டி தொகையை மத்திய நிதியமைச்சகம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் கடந்த மாத மொத்த வசூல் குறித்த தகவல்களை நேற்று வெளியிட்டது.

    அதன்படி ரூ.1.02 லட்சம் கோடி (ரூ.1,02,709 கோடி) கடந்த மாதம் வசூலிக்கப்பட்டு இருக்கிறது. இதில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.17,592 கோடியும், மாநிலஜி.எஸ்.டி.ரூ.22,653 கோடியும் அடங்கும்.

    இதன் மூலம் தொடர்ந்து 8 மாதங்களாக மொத்தஜி.எஸ்.டி.வசூல் ரூ.1 லட்சம் கோடியை கடந்திருக்கிறது. அதேநேரம் சிறு வணிகர்கள் ஜி.எஸ்.டி. தாக்கலுக்காக இந்த மாதம் முதல் வாரம் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. எனவே இந்த தொகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மத்திய அரசு


    மே மாதத்தில் ரூ.1.02 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டு இருந்தாலும், கடந்த ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில் இது 27 சதவீதம் குறைவாகும். இதன் மூலம் கொரோனாவின் 2-வது அலை ஜி.எஸ்.டி.யில் லேசான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது தெளிவாகி இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.

    எனினும் கடந்த ஆண்டு மே மாத வசூலை ஒப்பிடுகையில் இது 65 சதவீதம் அதிகம் ஆகும். கொரோனா 2-வது அலையால் மாநிலங்கள் ஊரடங்கை அமல்படுத்தி பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்த போதும், மொத்த ஜி.எஸ்.டி.வசூல் ரூ.1 லட்சம் கோடியை கடந்திருப்பது கவனிக்கத்தக்கது.
    Next Story
    ×