search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்முவில் ஏழுமலையான் கோவில் கட்டுவது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்திய காட்சி.
    X
    ஜம்முவில் ஏழுமலையான் கோவில் கட்டுவது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்திய காட்சி.

    ஜம்முவில் ஏழுமலையான் கோவில் கட்ட வரும் 13-ந்தேதி பூமி பூஜை

    ஜம்முவில் கட்டப்படும் கோவில் குறித்து தேவஸ்தானம் பொறியாளர்கள் பவர் பாயிண்ட் மூலம் கோவில் முகமண்டபம் சுவர், பக்தர்கள் ஓய்வு விடுதி, சுவாமி வாகன மண்டபம், அர்ச்சகர்கள் குடியிருப்பு குறித்து விளக்கம் அளித்தனர்.
    திருப்பதி:

    ஜம்மு காஷ்மீரில் உள்ள மஜீன் கிராமத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு கோவில் கட்டுவதற்காக 25 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது.

    இதில் 25 ஏக்கர் நிலத்தில் ஏழுமலையான் கோவில் மற்றும் பக்தர்களுக்கான வசதிகள் வேதபாட சாலை, தியான மையம், குடியிருப்பு, வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட உள்ளன.

    அங்கு வரும் 13-ந்தேதி ஏழுமலையான் கோவில் கட்ட பூமி பூஜை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    இதற்கான ஏற்பாடுகள் குறித்து செயல் அதிகாரி ஜவஹர் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

    அப்போது ஜம்முவில் கட்டப்படும் கோவில் குறித்து தேவஸ்தானம் பொறியாளர்கள் பவர் பாயிண்ட் மூலம் கோவிலுடன் முகமண்டபம் சுவர், பக்தர்கள் ஓய்வு விடுதி, சுவாமி வாகன மண்டபம், அர்ச்சகர்கள் குடியிருப்பு, பணியாளர்கள் தங்குமிடம், பார்க்கிங், வேத பள்ளி, மின்சார பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

    இதையடுத்து அதிகாரிகளிடம் பேசிய செயல் அதிகாரி கோவில் கட்டும் பணிகளை 2 கட்டங்களாக பிரித்து செய்ய வேண்டும். கோவில் வளாகத்தில் உள்ள கட்டுமானங்களும் கற்களால் செய்யப்பட வேண்டும். கோவில் சுற்று சுவர் உயரமாக இருக்கும்படி கட்ட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் பூமி பூஜையை ஒட்டி வரும் 13-ந்தேதிக்குள் ஜம்முவில் செய்யவேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.



    Next Story
    ×