search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிகள் திறப்பு
    X
    பள்ளிகள் திறப்பு

    கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி அரசு-தனியார் பள்ளிகள் திறப்பு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

    கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி அரசு-தனியார் பள்ளிகள் திறக்கப்படும் என்ற பள்ளி கல்வித்துறையின் உத்தரவு, அரசு பள்ளிகள், அரசு மானியம் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு பொருந்தும் என்று அரசு தெரிவித்துள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் புதிய கல்வி ஆண்டு வழக்கமாக கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்கும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு அதாவது 2021-22-ம் கல்வி ஆண்டு ஜூலை மாதம் 1-ந் தேதி தொடங்கும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முதல் பருவ காலம் ஜூலை மாதம் 1-ந் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 9-ந் தேதி வரையும், 2-வது பருவ காலம் அக்டோபர் 21-ந் தேதி தொடங்கி 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வரையும் நடைபெறும்.

    முதல் பருவத்தில் தசரா பண்டிகையையொட்டி அக்டோபர் மாதம் 10-ந் தேதி தொடங்கி அதே மாதம் 20-ந் தேதி 11 நாட்கள் விடுமுறை விடப்படும். அடுத்த ஆண்டு (2022) கோடை விடுமுறை மே மாதம் 1-ந் தேதி தொடங்கி அதே மாதம் 28-ந் தேதி விடப்படும். பள்ளி கல்வித்துறையின் இந்த உத்தரவு, அரசு பள்ளிகள், அரசு மானியம் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு பொருந்தும் என்று அரசு தெரிவித்துள்ளது.
    Next Story
    ×