search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்
    X
    ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்

    மாணவர்களின் உயிர் முக்கியம்... பிளஸ்2 பொதுத்தேர்வை ரத்து செய்தது ஒடிசா அரசு

    மாநில பாடத்திட்டங்களின் கீழ் படிக்கும் மாணவர்களின் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை சில மாநிலங்கள் ரத்து செய்துள்ளனன.
    புவனேஸ்வர்:

    நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து மாநில பாடத்திட்டங்களின் கீழ் படிக்கும் மாணவர்களின் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதா, நடத்துவதா என்பது குறித்து பல்வேறு மாநிலங்களும் ஆலோசித்து முடிவுகளை அறிவித்துவருகின்றன. 

    உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளன. 


    அவ்வகையில் கொரோனா தொற்று காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். எந்த தேர்வையும் விட மாணவர்களின் உயிர்கள் தான் மிகவும் முக்கியம் என்றும் அவர் கூறினார்.
    Next Story
    ×