search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி
    X
    மம்தா பானர்ஜி

    மேற்கு வங்காளத்தில் உணவு விடுதிகள் 3 மணி நேரம் செயல்பட அனுமதி - மம்தா பானர்ஜி அறிவிப்பு

    ஊரடங்கு நிறைவடைந்தபின் 25 சதவீத ஊழியர்களுடன் வணிக வளாகங்கள் செயல்பட அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறிய மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் வருகிற 15-ந்தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், பல்வேறு வர்த்தக அமைப்பு பிரதிநிதிகளுடன் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று ஆலோசனை நடத்தினார்.

    அதில் பேசிய அவர், கொரோனா தொற்று குறைந்து வருவதால், தடுப்பூசி போட்டுக் கொண்ட ஊழியர்களுடன் உணவு விடுதிகள் தினமும் 3 மணி நேரம் செயல்படலாம் என தெரிவித்தார். அந்தவகையில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுவதாக கூறினார்.

    கோப்புப்படம்


    இதைப்போல ஊரடங்கு நிறைவடைந்தபின் 25 சதவீத ஊழியர்களுடன் வணிக வளாகங்கள் செயல்பட அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறிய மம்தா பானர்ஜி, மாநிலத்தில் தடுப்பூசி போடுவதற்கு உதவுமாறு வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகளையும் கேட்டுக்கொண்டார்.ஒட்டுமொத்த மக்களுக்கும் மாநில அரசே ஒரு கை கொண்டு தடுப்பூசி போட முடியாது எனக்கூறிய மம்தா, எனவே இந்த பணிகளுக்கு முன்வருமாறு வர்த்தக நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

    மேற்கு வங்காளத்தில் உணவு விடுதிகள் 3 மணி நேரம் திறந்து கொள்ள அனுமதிக்கப்படுவதாக முதல்-மந்திரி தெரிவித்தாலும், எப்போது முதல் இந்த அனுமதி நடைமுறைக்கு வருகிறது என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
    Next Story
    ×