search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏர் இந்தியா - கோப்புப்படம்
    X
    ஏர் இந்தியா - கோப்புப்படம்

    கொரோனா தொற்றுக்கு கடந்த மே மாதத்தில் ஏர் இந்தியா விமானிகள் 5 பேர் உயிரிழப்பு

    கடந்த மே மாதத்தில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 6 ஆயிரம் ஊழியர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்ட நிலையில் நாடு முழுவதும் தடுப்பூசி பற்றாக்குறையால் திட்டம் ரத்து செய்யப்பட்டது.
    புதுடெல்லி:

    ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 5 மூத்த விமானிகள் கடந்த மே மாதத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.  அவர்கள் ஹர்ஷ் திவாரி, குருபிரதாப் சிங், சந்தீப் ராணா, அமிதேஷ் பிரசாத் மற்றும் பிரசாத் எம் கர்மாகர் ஆகியோராவர்.

    இதனை முன்னிட்டு இந்திய வர்த்தக விமானிகளின் கூட்டமைப்பு, விமானிகள் மட்டுமின்றி அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் கொரோனா தடுப்பூசிபோட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

    கொரோனா வைரஸ்


    எனினும், கடந்த மே மாதத்தில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஜி.எஸ்.டி. மையத்தில் முகாம் நடத்தி 6 ஆயிரம் ஊழியர்களுக்கு தடுப்பூசி போட பெரிய அளவில் திட்டமிடப்பட்டது.  ஆனால், நாடு முழுவதும் தடுப்பூசி பற்றாக்குறையால் திட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது என ஏர் இந்தியாதெரிவித்து உள்ளது.
    Next Story
    ×