search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகாராஷ்டிர மந்திரி விஜய் வதேட்டிவார்
    X
    மகாராஷ்டிர மந்திரி விஜய் வதேட்டிவார்

    மகாராஷ்டிராவிலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து -மந்திரி தகவல்

    முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் மந்திரி சபை கூட்டத்தில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
    மும்பை:

    நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து மாநில பாடத்திட்டங்களின் கீழ் படிக்கும் மாணவர்களின் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதா, நடத்துவதா என்பது குறித்து பல்வேறு மாநிலங்களும் ஆலோசித்து வருகின்றன. சில மாநிலங்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

    மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்கனவே 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல்- மே மாதங்களில் நடத்த திட்டமிட்டது. பின்னர், கொரோனா 2-வது அலை காரணமாக அது தள்ளிவைக்கப்பட்டது. நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் மந்திரி சபை கூட்டத்தில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 

    தேர்வுக்கு தயாராகும் மாணவிகள் (கோப்பு படம்)

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கல்வி மந்திரி வர்ஷா கெய்க்வாட், தேர்வை நடத்துவது தொடர்பான திட்ட அறிக்கையை மாநில பேரிடர் நிர்வாக ஆணையத்துக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும், ஆணையத்திடம் இருந்து பதில் பெறப்பட்டு அதன்பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் கூறினார். அதேசமயம், மாணவர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம் தான் முன்னுரிமை என்றும் கூறினார்.

    இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக மந்திரி விஜய் வதேட்டிவார் தெரிவித்தார்.
    Next Story
    ×