search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி
    X
    மம்தா பானர்ஜி

    மேற்கு வங்காளத்தில் கொரோனா தொற்று பாதியாக குறைந்தது -மம்தா பானர்ஜி தகவல்

    மேற்கு வங்காளத்தில் 1.4 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு இலவசமாக செலுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், பாதிப்பு நிலவரம் தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:-

    மேற்கு வங்காளத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது. 1.4 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு இலவசமாக செலுத்தப்பட்டுள்ளன. 

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மற்ற மாநிலங்களில் எல்லாம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாம் குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் மட்டுமே விதித்துள்ளோம். பொதுமக்கள் நமக்கு ஒத்துழைப்பு அளித்ததால் தொற்று பரவல் குறைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தடுப்பூசி போடும் பணி

    மேற்கு வங்காளத்தில் நேற்று 8923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 135 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 13.94 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 13.08 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 15813 பேர் உயிரிழந்துள்ளனர். 70,015 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    தடுப்பூசி போடுவதற்காக பேருந்தை தடுப்பூசி மையமாக மாற்றியுள்ளது அரசு. இந்த பேருந்தை கொல்கத்தாவின் பல்வேறு மார்க்கெட் பகுதிகளுக்கு கொண்டு சென்று, காய்கறி வியாபாரிகள், மீன் வியாபாரிகள் உள்ளிட்ட முன்னுரிமை உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதனால் மார்க்கெட் வியாபாரிகள் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக வெளியில் சென்று மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை இருக்காது.
    Next Story
    ×