search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவர்கள்
    X
    மாணவர்கள்

    ராஜஸ்தானில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து

    மாணவர்களின் நலன் கருதி, நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக ராஜஸ்தான் அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
    கொரோனா பரவல் காரணமாக நேற்று முன்தினம் பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில், சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்வது என முடிவு செய்யப்பட்டது.

    அதேநேரம் மாநில கல்வி வாரியத்தில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வுகள் நடக்குமா? என்ற கேள்விக்குறி நிலவி வந்தது.

    இந்த நிலையில் குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் 12-ம் வகுப்பு தேர்வையும் ரத்து செய்து நேற்று அறிவிப்பு வெளியிட்டன.

    இதையும் படிக்க... குஜராத், மத்திய பிரதேசத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து


    இதற்கிடையே ஹரியானா, கோவா அரசும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளன.

    இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக 10, +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக ராஜஸ்தான் அரசும் அறிவித்துள்ளது.
    Next Story
    ×