search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசு
    X
    மத்திய அரசு

    வாடகை வீடு பற்றாக்குறைக்கு தீர்வு காணும் சட்டம் - மத்திய மந்திரிசபை ஒப்புதல்

    இந்தியா-ஜப்பான் இடையே நகர்ப்புற மேம்பாடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
    புதுடெல்லி:

    வாடகை வீடு பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காணும் மாதிரி குத்தகை சட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது.

    அதில், மாதிரி குத்தகை சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மாநிலங்களுக்கு வழங்குவதற்காக இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது. இதன் அடிப்படையில், மாநிலங்கள் புதிதாக வாடகை வீடு சட்டங்களை இயற்றலாம் அல்லது ஏற்கனவே உள்ள வாடகை வீட்டு சட்டங்களில் திருத்தம் செய்யலாம்.

    வாடகை வீடு தொடர்பான சட்டங்களை முழுமையாக ஆய்வு செய்து இச்சட்டம் கொண்டு வரப்படுகிறது. வாடகை வீடு பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காண்பதே இச்சட்டத்தின் நோக்கம். அதற்காக அனைத்து வருவாய் பிரிவினருக்கும் ஏற்றவகையில், போதிய வாடகை வீடுகள் உருவாக்கப்படும்.

    துடிப்பான, நிலையான வாடகை வீட்டு சந்தை உருவாக்கப்படும். அதை அமைப்புரீதியான சந்தையாக மாற்றுவதும் இச்சட்டத்தின் நோக்கம் ஆகும். காலியாக உள்ள வீடுகளை வாடகை வீடாக பயன்படுத்த திறந்து விடுவதற்கு சட்டம் வழிவகுக்கிறது. இதில், தனியார் பங்கேற்பு ஊக்குவிக்கப்படும்

    இந்தியா-ஜப்பான் இடையே நகர்ப்புற மேம்பாடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஒத்துழைப்புக்கான திட்டங்களை நிறைவேற்ற கூட்டு பணிக்குழு ஒன்று உருவாக்கப்படும். இக்குழுவின் கூட்டம் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். ஜப்பானிலும், இந்தியாவிலும் மாறிமாறி நடக்கும்.

    ஒப்பந்தம் கையெழுத்தானதில் இருந்து 5 ஆண்டுகளுக்கு இது அமலில் இருக்கும். நகர்ப்புற மேம்பாடு, ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் உள்ளிட்டவற்றில் வேலைவாய்ப்பை உருவாக்க இது வழிவகுக்கும்.

    கனிமவளத்துறையில் ஒத்துழைப்பது தொடர்பாக இந்தியா-அர்ஜென்டினா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    வெகுஜன ஊடகத்துறையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்.சி.ஓ.) உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பு தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    வெகுஜன ஊடகத்துறையில் சிறப்பான நடைமுறைகளையும், புதுமை கண்டுபிடிப்புகளையும் உறுப்பு நாடுகளுக்கிடையே பகிர்ந்து கொள்ள இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது. டெலிவிஷன் ஒளிபரப்பு, வானொலி ஒலிபரப்பு போன்றவற்றுக்கும் இது உதவும்.
    Next Story
    ×