search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    மகாராஷ்டிராவில் 15 ஆயிரத்துக்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு

    தலைநகர் மும்பையில் புதிதாக 831 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் நகரில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 87 ஆயிரத்து 82 ஆக உயர்ந்து உள்ளது.
    மும்பை :

    மகாராஷ்டிராவில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 15 ஆயிரத்து 77 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று மாநிலத்தில் புதிதாக 14 ஆயிரத்து 123 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடைசியாக மாநிலத்தில் கடந்த மார்ச் 10-ந் தேதி 13 ஆயிரத்து 659 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. அதன்பிறகு தற்போது பாதிப்பு 15 ஆயிரத்தைவிட குறைந்து உள்ளது.

    இதுவரை மாநிலத்தில் 57 லட்சத்து 61 ஆயிரத்து 15 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 54 லட்சத்து 31 ஆயிரத்து 319 பேர் குணமடைந்தனர். நேற்று மட்டும் 35 ஆயிரத்து 949 பேர் குணமாகினர். இதனால் தற்போது மாநிலத்தில் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்து 681 ஆக குறைந்து உள்ளது. மாநிலத்தில் மேலும் 477 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை தொற்றுக்கு 96 ஆயிரத்து 198 பேர் உயிரிழந்து உள்ளனர்.

    தலைநகர் மும்பையில் நேற்று புதிதாக 831 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் நகரில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 87 ஆயிரத்து 82 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 6 லட்சத்து 72 ஆயிரத்து 664 பேர் குணமாகி உள்ளனர். தற்போது 17 ஆயிரத்து 328 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதேபோல நகரில் மேலும் 23 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை தொற்றுக்கு 14 ஆயிரத்து 907 பேர் உயிரிழந்து உள்ளனர். நகரில் தொற்று பாதித்தவர்களில் 95 சதவீதம் பேர் குணமாகி உள்ளனர். நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 453 நாட்களாக உள்ளது.

    தாராவியில் நேற்று புதிதாக 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அங்கு 17 பேர் மட்டுமே வைரஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×