search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பரோலில் விட்டாலும், ஜெயிலை விட்டு வெளியேற மறுக்கும் கைதிகள் - மராட்டியத்தில் வினோதம்

    மராட்டியத்தில் ஜெயில்களில் அதிகளவில் கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். கொரோனா பரவலை அடுத்து, ஜெயில்களில் நெரிசலை குறைக்க அரசு முடிவு செய்து கைதிகளை சிறைத்துறை பரோலில் அனுப்பி வைத்தது.
    மும்பை:

    மராட்டியத்தில் பரோலில் வெளியே விட்டாலும், 26 கைதிகள் ஜெயிலை விட்டு வெளியே செல்ல மறுத்து உள்ளனா்.

    மராட்டியத்தில் உள்ள ஜெயில்களில் அதிகளவில் கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். கொரோனா பரவலை அடுத்து, ஜெயில்களில் நெரிசலை குறைக்க அரசு முடிவு செய்து, தகுதி உள்ள கைதிகளை சிறைத்துறை பரோலில் அனுப்பி வைத்தது. இந்தநிலையில் அரசு விட்டாலும், நாங்கள் ஜெயிலை விட்டு நகர மாட்டோம் என சில கைதிகள் அடம்பிடித்தது தெரியவந்து உள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 26 கைதிகள் பரோலில் செல்ல வாய்ப்பு இருந்தும், ஜெயிலிலேயே இருப்பது தெரியவந்து உள்ளது.

    கொரோனா வைரஸ்


    இதில் நவிமும்பை தலோஜா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ஒடிசாவை சேர்ந்த கைதி ஒருவர், வெளியே போனால் குடும்பத்திற்கு பாரமாக இருந்துவிடுவோம் என நினைத்து வீடு திரும்ப மறுத்துவருவதாக ஜெயில் சூப்பிரண்டு கூறினார்.

    மேலும் அவர் கூறுகையில், “பரோலில் வீட்டுக்கு போக சொன்னால், ஒடிசாவை சேர்ந்த கைதி ஜெயிலில் வேலை பார்த்து பணத்தை சேர்த்து வைக்க வேண்டும் என கூறுகிறார்’’ என்றார்.

    இதேபோல ஒருசில கைதிகள் வெளியே சென்றால் வேலைவாய்ப்பு இல்லாமல் கஷ்டப்படுவோம் என பயந்தும், தண்டனை காலத்தை முடித்துவிட்டு வெளியே செல்லலாம் என சிலரும் பரோலில் செல்லாமல் உள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் கூறினர்.

    மேலும் இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘நாங்கள் கைதிகளுக்கு எல்லா மருத்துவ வசதிகளையும் வழங்குகிறோம். கைதிகளுக்கு என தனியாக கொரோனா சிகிச்சை மையம் வைத்து உள்ளோம். எனவே தொற்று காலத்தில் ஜெயிலில் இருப்பது பாதுகாப்பானது என கைதிகள் நினைக்கின்றனர்’’ என்றார்.
    Next Story
    ×