search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்தராமையா
    X
    சித்தராமையா

    கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா மருத்துவமனையில் அனுமதி

    கர்நாடக மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக சித்தராமையா இருந்து வருகிறார்.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியான சித்தராமையா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சித்தராமையாவிற்கு கடுமையான காய்ச்சல் இருந்ததைத் தொடர்ந்து அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை எனத் தெரிய வந்துள்ளது. எனினும் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி மேலும் 2 நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சித்தராமையாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×