search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐதராபாத் வந்தடைந்த ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள்
    X
    ஐதராபாத் வந்தடைந்த ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள்

    மேலும் 30 லட்சம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்தியா வந்தடைந்தது

    கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவின் அவசர தேவை கருதி ஸ்புட்னிக் வி தடுப்பூசி மருந்தை ரஷ்யா வழங்கி வருகிறது.
    ஐதராபாத்:

    இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகளுடன் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

    ரஷ்யாவில் இருந்து முதல் கட்டமாக 1.5 லட்சம் டோஸ் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மருந்துகள் கடந்த மாதம் 1-ம் தேதி ஐதராபாத் வந்தது. இரண்டாம் தொகுப்பு ஸ்புட்னிக்-வி தடுப்பூசி கடந்த 16-ம் தேதி ஐதராபாத் வந்தடைந்தது. இதுவரை 3 லட்சம் டோஸ் ஸ்புட்னிக் வி தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளன.
     
    ஸ்புட்னிக்-வி தடுப்பூசி

    ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவில் சப்ளை செய்வதற்கும், தயாரிப்பதற்கும் ஐதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஒரு டோஸ் ஸ்புட்னிக் தடுப்பூசியின் விலை 1,195 ரூபாயாக நிர்ணயித்துள்ளது.

    இந்நிலையில் ரஷ்யாவிலிருந்து சிறப்பு சரக்கு விமானம் மூலம் 30 லட்சம் டோஸ் ஸ்புட்னிக் தடுப்பூசிகள், ஐதராபாத் விமான நிலையத்துக்கு நேற்று வந்தடைந்தன.

    ஜூன் இரண்டாவது வாரத்தில் இருந்து அப்பலோ மருத்துவமனைகள் ஸ்புட்னிக் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தப் போவதாக தெரிவித்துள்ளன.
    Next Story
    ×