search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புழுதிப்புயல்
    X
    புழுதிப்புயல்

    டெல்லியில் திடீரென வீசிய புழுதிப்புயல் - பொதுமக்கள் அவதி

    டெல்லியில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை காணப்பட்டு வந்தது. பகலில் வெயிலும் அதிகமாக அடித்து வந்தது. இந்த நிலையில் டெல்லியின் பல பகுதிகளில் திடீரென புழுதிப்புயல் வீசியது.
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை காணப்பட்டு வந்தது. பகலில் வெயிலும் அதிகமாக அடித்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலையில் டெல்லியின் பல பகுதிகளில் திடீரென புழுதிப்புயல் வீசியது. இதனால் மக்கள் பெரும் அவதியடைந்தனர். எனினும் இந்த நிகழ்வால் அங்கு குறிப்பிடத்தக்க பாதிப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

    வறண்ட வானிலை நிலவி வந்த தலைநகரில், இந்த புழுதிப்புயலால் வானிலை திடீரென மாற்றமடைந்தது. சில இடங்களில் மாலையில் மழையும் பெய்தது.

    டெல்லியில் நேற்று அதிகபட்ச வெப்பநிலையாக 38.2 டிகிரியும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 25.2 டிகிரி செல்சியசும் பதிவாகி இருந்தது. இது மாநிலத்தில் இந்த நாட்களில் நிலவிய சராசரி வெப்பநிலையை விட குறைவாகும்.

    கொரோனாவால் மிகுந்த சிரமத்தை சந்தித்து வரும் டெல்லிவாசிகளுக்கு இந்த புழுதிப்புயல் திடீர் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×