search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நாடு முழுவதும் 5.22 சதவீதம் திருநங்கைகளே தடுப்பூசி போட்டுள்ளனர்

    இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி, கடந்த ஜனவரி 16-ந் தேதியில் இருந்து நடந்து வருகிறது
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி, கடந்த ஜனவரி 16-ந் தேதியில் இருந்து நடந்து வருகிறது. ஆண்களில் 8 கோடியே 80 லட்சத்து 47 ஆயிரத்து 53 பேரும், பெண்களில் 7 கோடியே 67 லட்சத்து 64 ஆயிரத்து 479 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

    ஆனால், மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகள், 25 ஆயிரத்து 468 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர். இது, அவர்களது மக்கள்தொகையில் வெறும் 5.22 சதவீதம் ஆகும்.

    இதுகுறித்து திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் புஷ்பா மை என்ற பெண்மணி கூறியதாவது:-

    தடுப்பூசி போட்டால் மரணம் ஏற்படும் என்று திருநங்கைகளிடையே தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. அத்துடன், அவர்களிடம் அரசாங்க ஆவணங்கள் இல்லை. தடுப்பூசி மையத்துக்கு சென்றால் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர். ஸ்மார்ட்போன் பயன்படுத்தி, இணையதளத்தில் முன்பதிவு செய்யும் தொழில்நுட்ப அறிவு இல்லை. இதுபோன்ற காரணங்களால், அவர்கள் தடுப்பூசி போடுவது குறைவாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×