search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் அதிஷி
    X
    ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் அதிஷி

    தடுப்பூசிகள், தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு திருப்பி விடப்படுகின்றன - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    பா.ஜ.க. கமிஷன் பெற தடுப்பூசிகள் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு திருப்பி விடப்படுவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
    புதுடெல்லி:

    பா.ஜ.க. கமிஷன் பெற தடுப்பூசிகள் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு திருப்பி விடப்படுவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

    டெல்லியில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் அதிஷி எம்.எல்.ஏ., நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார்.

    அப்போது அவர்,“தடுப்பூசிகளை தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு திருப்பி விடுவதின்மூலம் பா.ஜ.க. பெரும் கமிஷன் பெறுகிறது. இதற்கான ஆதாரம், கர்நாடகத்தில் இருந்து வெளிவந்திருக்கிறது. இதில் பா.ஜ.க. எம்.பி. தேஜஸ்வி சூர்யா மற்றும் எம்.எல்.ஏ., ரவி சுப்ரமணியாவுக்கு தொடர்பு இருக்கிறது” என்று குற்றம் சாட்டினார்.

    எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு அதிக அளவில் கமிஷன் கொடுக்க வேண்டியதிருப்பதால்தான் தடுப்பூசிக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக ஆஸ்பத்திரி தரப்பில் கூறியதை தொலைபேசி அழைப்பு பதிவுகள் காட்டுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

    பா.ஜ.க.வின் தேஜஸ்வி சூர்யா எம்.பி.யும், அவரது உறவினரான ரவி சுப்ரமணியா எம்.எல்.ஏ.வும் தடுப்பூசிகள்மூலம் பணம் சம்பாதிக்கின்றனர், அவர்கள் மீது வழக்கு போட வேண்டும், அவர்களது எம்.பி., எம்.எல்.ஏ., பதவிகளை பறிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி நேற்று முன்தினம் குற்றம்சாட்டிய நிலையில் ஆம் ஆத்மி கட்சி இப்போது குற்றம் சாட்டி உள்ளது.

    இந்த குற்றச்சாட்டுகளை பா.ஜ.க. திட்டவட்டமாக மறுத்து உள்ளது.

    இது தொடர்பாக அந்தக் கட்சியின் டெல்லி செய்தி தொடர்பாளர் பிரவிண் சங்கர் கபூர் கூறுகையில், “தடுப்பூசி சற்று மெதுவாக வருவதில் சந்தேகம் இல்லை. ஆனால், பாரத் பயோடெக் மற்றும் இந்திய சீரம் நிறுவனம் ஆகிய இரண்டும் அடுத்த 10-15 நாட்களில் வினியோகம் இயல்பாகி விடும் என கூறி உள்ளன. உற்பத்தியாளர்கள் இப்படி உறுதி அளித்துள்ளபோதும் அதிஷி போன்ற ஆம் ஆத்மி தலைவர்கள் ஒவ்வொரு நாளும் எதற்காக தடுப்பூசி பற்றாக்குறை பற்றியும், வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கவேண்டியது குறித்தும் எதற்காக பதிவு செய்த அறிக்கையை வெளியிட்டு விளையாடுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை” என குறிப்பிட்டார்.
    Next Story
    ×