search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார்
    X
    பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார்

    கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு நிதியுதவி - பீகார் அரசு அறிவிப்பு

    கொரோனா தொற்றினால் தாய், தந்தையரை இழந்த பிள்ளைகள் அல்லது வைரஸ் தொற்று பாதிப்பினால் பெற்றோரில் இருவரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு அரசு நிதி உதவி அளிக்கும் என பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
    பாட்னா:

    கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்து ஆதரவற்று நிற்கும் குழந்தைகளுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்கப்படும் என பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். அந்த குழந்தைகள் 18 வயதை எட்டும் வரை பால் சஹாயதா யோஜனா எனும் திட்டத்தின் கீழ் இந்த நிதி உதவி அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த குழந்தைகளை பராமரிப்பு மையத்தில் வைத்து பாதுகாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    கோப்புபடம்

    'கொரோனா வைரஸ் தொற்றினால் தாய், தந்தையரை இழந்த பிள்ளைகள் அல்லது வைரஸ் தொற்று பாதிப்பினால் பெற்றோரில் இருவரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு அரசு இந்த நிதி உதவியை அளிக்கும். இதில் பெண் குழந்தைகளை கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயாவில் சேர்க்க முடிவு செய்துள்ளோம்' என கூறியுள்ளார்.

    கொரோனா தொற்றால் குழந்தைகளை இழந்த பிள்ளைகளுக்கு உதவுமாறு மாநில அரசுகளை நடவடிக்கை எடுக்குமாறு அண்மையில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    இதையடுத்து டெல்லி, சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், அரியானா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் கொரோனா தொற்றால் ஆதரவற்று நிற்கும் குழந்தைகளுக்கான உதவியை அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×