என் மலர்

  செய்திகள்

  யோகி ஆதித்யநாத்
  X
  யோகி ஆதித்யநாத்

  இந்தியாவிலேயே உயிரிழப்பு சதவீதம் மிகவும் குறைவான மாநிலம் உ.பி.: யோகி ஆதித்யநாத்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தர பிரதேசம் மாநிலத்தில் இன்று புதிதாக 1,900 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 41 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
  மகாராஷ்டிரா, டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது உத்தர பிரதேச மாநிலத்திலும் அதிகமாக இருந்தது. குறிப்பாக அம்மாநிலத்தின் கிராமப் பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாக பரவியது என்று தகவல் வெளியானது, கங்கை ஆற்றில் உடல்கள் மிதந்து வந்த சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

  இந்த நிலையில் இந்தியாவிலேயே இறப்பு சதவீதம் மிகவும் குறைவான மாநிலம் உத்தர பிரதேசம்தான் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து யோகி ஆதித்யநாத் கூறுகையில் ‘‘உத்தர பிரதேச மாநிலத்தில் இன்று புதிதாக 1,900 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை 41 ஆயிரம் பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தியாவிலேயே உத்தர பிரதேசத்தில்தான் உயிரிழப்பு சதவீதம் குறைவு. இங்கு குறைந்த பாசிட்டிவ், அதிகமான டிஸ்சார்ஜ் சதவீதம்தான்.

  ஒரு வாரத்திற்கு மேலாக 600-க்கு மேல் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும். 600-க்கு கீழ் வரும்போது தானாகவே ஊரடங்கு நீக்கப்படும். 55 மாவட்டங்களில் காலை ஏழு மணி முதல் இரவு 7 மணி ஊரடங்கை தளர்த்தியுள்ளோம்’’ என்றார்.
  Next Story
  ×