என் மலர்

  செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  உத்தரபிரதேசத்தில் திருமண வீட்டில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தரபிரதேசத்தில் திருமண வீட்டில் இரும்பு கம்பி ஒன்றில் உயர் அழுத்த மின்சார கம்பியில் உரசியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
  சீதாபூர்:

  உத்தரபிரசேதத்தின் சீதாபூர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஹனுமன்பூர் கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்த திருமண சடங்குகள் நள்ளிரவையும் கடந்து நடந்து கொண்டிருந்தது.

  இந்த சடங்கின்போது அங்கு பலத்த இடி-மின்னல் காணப்பட்டது. இதில் மின்னல் தாக்கியதில் திருமண பந்தல் சரிந்தது. அப்போது பந்தலில் இருந்த இரும்பு கம்பி ஒன்று, அந்த வழியாக சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்சார கம்பியில் உரசியது.

  இதில் கம்பி வழியாக மின்சாரம் பாய்ந்ததில், 7 பேர் தூக்கி வீசப்பட்டனர். மேலும் அவர்கள் உடலில் தீப்பிடித்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த 7 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  ஆனால் 4 பேர் ஆஸ்பத்திரியில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  Next Story
  ×