search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் - ஜிதேந்திர சிங் அறிவுறுத்தல்

    நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் அதே வேளையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் அதே வேளையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் அனைவரும் விரைவாக கொரோனா தடுப்பூசி எடுத்து கொள்ள வேண்டும் என மத்திய பணியாளர் அமைச்சகத்தின் இணை மந்திரி ஜிதேந்திர சிங் அறிவுறுத்தியுள்ளார்.

    ஜிதேந்திர சிங்


    இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான தடுப்பூசி திட்டத்தில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களை சேர்க்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதால் பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறை (டிஓபிடி) 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து அரசு ஊழியர்களும் விரைவாக தடுப்பூசி போட்டு கொள்ள அறிவுறுத்துகிறது’’ என கூறினார்.
    Next Story
    ×