என் மலர்

  செய்திகள்

  ஈரானில் இருந்து வந்த ஆக்சிஜன் செறிவூட்டிகள்
  X
  ஈரானில் இருந்து வந்த ஆக்சிஜன் செறிவூட்டிகள்

  ஈரான் அனுப்பிய 300 ஆக்சிஜன் செறிவூட்டிகள் இந்தியா வருகை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிற்கு பல்வேறு நாடுகள் மருத்துவ உபகரணங்களை அனுப்பி வருகின்றன.
  புதுடெல்லி:

  இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையில், கொரோனாவை கட்டுப்படுத்த போராடி வரும் இந்தியாவிற்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

  அந்த வகையில் ரஷியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, பெல்ஜியம், ருமேனியா, லக்சம்பர், சிங்கப்பூர், போர்ச்சுகல், ஸ்வீடன், நியூசிலாந்து, குவைத், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, தென்கொரியா உள்பட பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு உதவி வழங்கியுள்ளன.

  இந்நிலையில், இந்தியாவுக்கு தேவையான நிவாரண உதவிகளை ஈரானும் வழங்கியுள்ளது. ஈரான் அனுப்பிய 300 ஆக்சிஜன் செறிவூட்டிகள் விமானம் மூலம் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தன. இவை கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளன.
  Next Story
  ×