என் மலர்

  செய்திகள்

  ரபேல் போர் விமானம்
  X
  ரபேல் போர் விமானம்

  6-வது கட்டமாக 3 ரபேல் போர் விமானம் இந்தியா வந்தடைந்தது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரான்ஸிடம் இந்தியா 36 ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், 6-வது கட்டமாக மூன்று விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ளது.
  இந்தியா கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 36 ரபேல் போர் விமாங்களை வாங்குவதற்காக பிரான்ஸ் உடன் ஒப்பந்தம் செய்தது. கடந்த மாதம் 22-ந்தேதி ஐந்தாம் கட்டமாக நான்கு விமானங்கள் இந்தியா வந்தடைந்து, விமானப் படைப்பிரிவில் சேர்க்கப்பட்டன.

  இந்த நிலையில் நேற்று 6-வது கட்டமாக மூன்று விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ளது. மேற்கு வங்காளத்தில் உள்ள ஹசிமாரா விமானப் படைப்பிரிவில் சேர்க்கப்பட இருக்கிறது. இதுவரை 23 விமானங்களை இந்தியா பெற்றுள்ளது.

  கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் கட்டமாக ஐந்து விமானங்கள் இந்தியா வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×