என் மலர்

  செய்திகள்

  டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்
  X
  டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

  டெல்லியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் -கெஜ்ரிவால் அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒவ்வொரு வாரமும், பொதுமக்கள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகளை கேட்டறிந்து, அதன்படி படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படும் என கெஜ்ரிவால் கூறினார்.
  புதுடெல்லி:

  தலைநகர் டெல்லியில் கொரானா பாதிப்பு நிலவரம் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

  டெல்லியில் கொரோனா 2வது அலையின் தாக்கம் வெகுவாக குறைந்து கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு விகிதம் 1.5 சதவீதம் என்ற அளவில் குறைந்தது. புதிதாக 1100 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கட்டுப்பாடுகளை தளர்த்தவேண்டிய நேரம் இது. திங்கட்கிழமை முதல் கட்டுப்பாடகள் படிப்படியாக தளர்த்தப்படும்.

  கூலி தொழிலாளர்கள் மற்றும் அத்தகைய உழைப்பை உள்ளடக்கிய துறைகளில் தளர்வுகள் இருக்கும். இந்த பணியாளர்கள் பொதுவாக கட்டுமானத் துறையிலும் தொழிற்சாலைகளிலும் உள்ளனர். 

  திங்கள்கிழமை முதல் தொழில் வளாகங்களில் உள்ள உற்பத்தி அலகுகள் சில வரம்புகளுக்கு உட்பட்டு செயல்பட அனுமதிக்கப்படும். குறிப்பிட்ட இடங்களில் கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொழிலாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

  ஒவ்வொரு வாரமும், பொதுமக்கள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகளை கேட்டறிந்து, அதன்படி படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படும். அதேசமயம், தொற்று பரவல் மீண்டும் அதிகரித்தால் தளர்வுகள் நிறுத்தி வைக்கப்படும். எனவே, ஒவ்வொருவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×