என் மலர்

  செய்திகள்

  சிவசேனா
  X
  சிவசேனா

  கொரோனா சமயத்தில் உத்தரபிரதேசத்தில் பாஜக அரசின் செயல்பாடு மோசமாக இருந்தது: சிவசேனா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக உத்தரபிரதேச தேர்தலில் பா.ஜனதா கவனம் செலுத்துகிறது என சிவசேனா குற்றச்சாட்டி உள்ளது.
  மும்பை :

  மராட்டியம் உள்பட நாடு முழுவதையும் கொரோனா உயிர்கொல்லி நோய் ஆட்டி படைத்து வருகிறது. இந்தநிலையில் பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு கொரோனாவை சமாளிப்பதை தவிர்த்துவிட்டு உத்தரபிரதேச தேர்தலில் கவனம் செலுத்தி வருவதாக சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியுள்ளது.

  இது குறித்து அதில் கூறியிருப்பதாவது:-

  பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் தேர்தலையொட்டி ‘மிஷன் உத்தரப்பிரதேசம்’ பற்றி விவாதிக்க ஒரு கூட்டத்தை நடத்தினர்.

  இதை பார்க்கும்போது நாட்டின் ஒட்டுமொத்த பிரச்சினைகளும் தீர்ந்துவிட்டது போலவும், தேர்தல் அறிவித்து போட்டியிடும் வேலை மட்டுமே இருப்பது போலவும் தோன்றுகிறது.

  ஜனநாயகத்தில் தேர்தல் முக்கியம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக தேர்தலுக்கு முன்னுரிமை அளிப்பதா?

  உத்தரபிரதேச பஞ்சாயத்து தேர்தலில் சரியாக செயல்பட முடியாத நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அந்த மாநில சட்டசபை தேர்தலில் தாங்கள் இழந்த நற்பெயரை எப்படி மேம்படுத்துவது, தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என்பது குறித்து பா.ஜனதா சிந்தித்து வருகிறது.

  கொரோனா சமயத்தில் உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா அரசின் செயல்பாடு மோசமாக இருந்தது. சட்டமன்ற தேர்தலில் மட்டுமல்லாமல் வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜனதா சிக்கலை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.

  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
  Next Story
  ×