search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரி சுதாகர்
    X
    மந்திரி சுதாகர்

    கொரோனா நோயாளிகளுக்கு முதல் வாரத்தில் ஸ்டிராய்டு வழங்க தடை: மந்திரி சுதாகர்

    கொரோனாவில் இருந்து அடைபவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படும், அவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் அறிகுறிகள் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம்.
    பெங்களூரு :

    சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் கருப்பு பூஞ்சை நோய் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தினேன். கொரோனா நோயாளிகளுக்கு முதல் வாரத்திலேயே ஸ்டிராய்டு மருந்து வழங்கப்படுவது, இந்த கருப்பு பூஞ்சை நோய் தாக்குதற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. இதை தடுக்க வேண்டியது அவசியம். அதனால், நோயாளிகளுக்கு முதல் வாரத்தில் ஸ்டிராய்டு மருந்து வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 2-வது வாரத்தில் இருந்து தான் ஸ்டிராய்டு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம்.

    பெங்களூரு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 95 கருப்பு பூஞ்சை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 75 பேருக்கு கட்டுப்பாடு இல்லாத சர்ககரை நோய் பாதிப்பு உள்ளது. அவர்களுக்கு கொரோனா சிகிச்சையின்போது, ஸ்டிராய்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. அதனால் இந்த நோய் பரவலை தடுக்கும் நோக்கத்தில் கொரோனா நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்வதில் புதிய விதிமுறைகளை கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கொரோனாவில் இருந்து அடைபவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படும், அவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் அறிகுறிகள் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். தேவைப்பட்டால் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்ய வேண்டும். டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ஒரு வாரத்திற்கு பிறகு கொரோனா நோயாளிகள் ஆஸ்பத்திரிகளுக்கு வந்து தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் சுகாதாரத்துறையினர், அந்த நோயாளிகளை தொடர்பு கொண்டு, கருப்பு பூஞ்சை நோய் அறிகுறிகள் ஏதாவது உள்ளதா என்பது குறித்து கேட்டு அறிவார்கள்.

    அத்தகைய அறிகுறிகள் இருந்தால், அவர்களை ஆஸ்பத்திரிக்கு வரவழைத்து மேலும் பரிசோதனைகள் செய்யப்படும். செக் குடியரசு நாடு, 75 வென்டிலேட்டர் கருவிகளை கர்நாடகத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

    இவ்வாறு சுதாகர் கூறினார்.
    Next Story
    ×