search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பியூஷ் கோயல்
    X
    பியூஷ் கோயல்

    கொரோனா கால சேவை : ரெயில்வேயை வரலாறு நினைவில் கொள்ளும் - பியூஷ் கோயல் பெருமிதம்

    கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான போரில் இந்திய ரெயில்வே மகத்தான பங்களிப்பு செய்துள்ளது. இதை வரலாறு நினைவில் கொள்ளும் என பியூஷ் கோயல் கூறினார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் மண்டல ரெயில்வேக்களின் மூத்த அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டத்தை ரெயில்வே துறை நேற்று நடத்தியது.

    இதில் ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான போரில் இந்திய ரெயில்வே மகத்தான பங்களிப்பு செய்துள்ளது. இதை வரலாறு நினைவில் கொள்ளும்” என பெருமிதத்துடன் கூறினார்.

    கோப்புப்படம்


    தொடர்ந்து அவர் பேசும்போது, ஒரு மாதத்துக்கு முன்பாக 1,080 டேங்கர்களுடன் 272 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தங்கள் சேவையை தொடங்கின. இந்த ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 17 ஆயிரத்து 945 டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை 15 மாநிலங்களுக்கு கொண்டு போய்ச் சேர்த்துள்ளன எனவும் தெரிவித்தார்.

    ரெயில்வே அதிகாரிகளின் கடின உழைப்பை பியூஷ் கோயல் மனதார பாராட்டினார்.
    Next Story
    ×