search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பதவியேற்கும் எம்எல்ஏ
    X
    பதவியேற்கும் எம்எல்ஏ

    கேரள சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது- புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு

    கேரளாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு இடைக்கால சபாநாயகர் ரகீம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் 140 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அபார வெற்றிபெற்றது. இதையடுத்து கடந்த 20ம் தேதி புதிய அரசு பொறுப்பேற்றது. மாநில முதல்-மந்திரியாக பினராயி விஜயன் பதவியேற்றார். அவருடன் 20 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றது. 

    இதையடுத்து சட்டசபையை நடத்துவதற்கு இடைக்கால சபாநாயகராக பிடிஏ ரகீம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கடந்த வெள்ளிக்கிழமை ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    எம்எல்ஏ பதவியேற்பு

    இந்நிலையில், 15-வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று எம்எல்ஏக்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு இடைக்கால சபாநாயகர் ரகீம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

    நாளை சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது. திரிதலா தொகுதி எம்எல்ஏ எம்.பி.ராஜேஷை, சபாநாயகர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்வு செய்துள்ளது.
    Next Story
    ×