search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் மந்திரி அசோக் கெலாட்
    X
    முதல் மந்திரி அசோக் கெலாட்

    ராஜஸ்தானில் ஜூன் 8-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

    நாட்டில் கொரோனா வைரசின் இரண்டாவது அலையை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கை கடுமையாக்கி வருகின்றன.
    ஜெய்ப்பூர்:

    இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கை கடுமையாக்கி உள்ளன.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ஜூன் 8-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என முதல் மந்திரி அசோக் கெலாட் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

    வேறு மாநிலத்தில் இருந்து ராஜஸ்தானுக்குள் வரும் பயணிகள் தங்களுடன் 72 மணிநேரத்திற்குள் எடுத்த ஆர்.டி.-பி.சி.ஆர். நெகடிவ் சான்றிதழை கொண்டு வரவேண்டும். இந்த பரிசோதனை சான்றிதழை கொண்டு வராத பயணிகள் 15 நாட்கள் தனிமை முகாமில் தங்க வைக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×