search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமாரசாமி
    X
    குமாரசாமி

    கருப்பு பூஞ்சை நோய்க்கு உடனடியாக மருந்துகள் கொள்முதல்: குமாரசாமி வலியுறுத்தல்

    கொரோனாவை விட கொடியதாக இருப்பதால் கருப்பு பூஞ்சை நோய்க்கு உடனடியாக மருந்துகளை மாநில அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.
    பெங்களூரு :

    முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை நிராகரிக்க முடியாது என்று அரசு கூறியுள்ளது. ஆனால் அந்த நோய்க்கு வழங்கப்படும் லிபோசோமல் ஆம்போடெரிசின் மருந்து மாநில அரசிடம் போதிய இருப்பு இல்லை. பரவி வரும் நோயை எதிர்கொள்ள அரசு எந்த அளவுக்கு முன்னேற்பாடுகளை செய்துள்ளது என்பதற்கு மருந்து பற்றாக்குறையே சாட்சி.

    இந்த கருப்பு பூஞ்சை நோய்க்கு தொடக்க நிலையிலேயே சீரான சிகிச்சை அளிக்க வேண்டும். ஏனென்றால் இந்த நோய் மிக வேகமாக பரவுகிறது. 2, 3 நாட்களில் அது கண், காது, மூளையை தாக்கி விடுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். அதனால் இந்த நோய் பாதித்துள்ள நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம்.

    அதிவேகமாக பரவும் நோய்க்கான மருந்து இல்லாமல் எப்படி அதை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்?. கொரோனாவில் இருந்து மீண்டவர்களில் வாரம் 400 பேருக்கு இந்த கருப்பு பூஞ்சை நோய் தாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த கருப்பு பூஞ்சை நோய், கொரோனாவை விட கொடியது.

    இந்த நோய் பாதிப்புக்கு ஆளானவர்களில் அதிகம் பேர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. அதனால் இந்த நோய்க்கான மருந்து தட்டுப்பாட்டை போக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து மாநில அரசு உடனே மருந்துகளை கொள்முதல் செய்ய வேண்டும்.

    இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×