search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரியங்கா காந்தி
    X
    பிரியங்கா காந்தி

    கொரோனா காலத்தில் நடுத்தர வகுப்பினருக்கு நிவாரணம் வழங்க பிரியங்கா 5 யோசனைகள்

    கொரோனா காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர வகுப்பினருக்கு நிவாரணம் வழங்க பிரியங்கா காந்தி 5 யோசனைகளை கடிதம் மூலம் யோகி ஆதித்யநாத்துக்கு எழுதியுள்ளார்
    புதுடெல்லி:

    உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று கடிதம் எழுதினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கொரோனா இரண்டாவது அலை, மக்களுக்கு தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    கோடிக்கணக்கான மக்கள் தங்கள் எதிர்காலம் குறித்து கவலைப்படுகிறார்கள். அவர்களின் வருமானம் குறைந்து விட்டது. பணவீக்கம் அதிகரித்து விட்டது. அதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்


    அவர்களுக்கு நிவாரணம் அளிக்க 5 யோசனைகளை தெரிவிக்கிறேன். தனியார் ஆஸ்பத்திரிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வருகின்றன. எனவே, தனியார் ஆஸ்பத்திரி பிரதிநிதிகளுடன் அமர்ந்து பேசி, நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். அதிக கட்டணம் செலுத்திய மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

    சமையல் எண்ணெய், காய்கறி, பழங்கள் போன்றவற்றின் விலையை கட்டுப்படுத்த வேண்டும். மின்கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டும். தனியார் பள்ளிகளின் கட்டணத்தை குறைக்கச் செய்ய வேண்டும். வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு பிரியங்கா கூறியுள்ளார்.
    Next Story
    ×