search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரி சுதாகர்
    X
    மந்திரி சுதாகர்

    கர்நாடகத்தில் வருகிற நவம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும்: மந்திரி சுதாகர்

    மத்திய அரசு இதுவரை 1 கோடியே 11 லட்சத்து 26 ஆயிரத்து 340 டோஸ் தடுப்பூசி வழங்கியுள்ளது. கர்நாடக அரசு நேரடியாக 9.50 லட்சம் டோஸ் தடுப்பூசி கொள்முதல் செய்துள்ளது.
    பெங்களூரு :

    சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் கிராமப்புறங்களில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இதை தடுக்க அங்கு பூத் மட்டத்தில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிராமங்களில் கொரோனா பாதிப்புக்கு ஆளாபவர்கள், கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். 2 கோடி ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி கொள்முதல் செய்ய சீரம் நிறுவனத்திடம் ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது.

    இதில் இதுவரை 2 லட்சம் தடுப்பூசி கர்நாடகத்திற்கு வந்துள்ளது. தற்போது மாநிலத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு இதுவரை 1 கோடியே 11 லட்சத்து 26 ஆயிரத்து 340 டோஸ் தடுப்பூசி வழங்கியுள்ளது. கர்நாடக அரசு நேரடியாக 9.50 லட்சம் டோஸ் தடுப்பூசி கொள்முதல் செய்துள்ளது.

    இதுவரை 1 கோடியே 13 லட்சத்து 61 ஆயிரத்து 234 பேருக்கு தடுப்பூசி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும். கோவேக்சின், ஸ்புட்னிக் தடுப்பூசிகள் கர்நாடகத்திலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மாநிலத்தில் தற்போது கொரோனா பாதிப்பைவிட அதில் இருந்து குணம் அடைவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இது நமக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. தனியார் நிறுவனம் ஒன்று 200 ஆக்சிஜன் செறிவூட்டிகளை நன்கொடையாக வழங்கியுள்ளது. மாநிலத்தில் கருப்பு பூஞ்சை நோய் பரவுவதை தடுக்க ஒரு செயல்படை அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு சுதாகர் கூறினார்.
    Next Story
    ×