search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரி ஆர்.அசோக்
    X
    மந்திரி ஆர்.அசோக்

    கர்நாடகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது நல்லது: மந்திரி ஆர்.அசோக்

    கர்நாடகத்திலும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 14 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வருகிற 24-ந் தேதியுடன் நிறைவடைகிறது.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த 11-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வருகிற 2-ந் தேதி வரை அமலில் இருக்கும்.

    இந்த நிலையில் மாநிலத்தில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. அதனால் மந்திரிகள் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள், ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். இந்த நிலையில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மராட்டிய மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தது. அங்கு முன்கூட்டியே ஊரடங்கை அமல்படுத்தினர். இதன் காரணமாக அங்கு தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக அந்த மாநிலத்தின் தலைநகர் மும்பையில் கொரோனா பரவல் பெருமளவில் குறைந்துவிட்டது.

    அதே போல் கர்நாடகத்திலும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 14 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வருகிற 24-ந் தேதியுடன் நிறைவடைகிறது. என்னை பொறுத்தவரையில் அமலில் உள்ள ஊரடங்கை நீட்டிப்பது நல்லது. இதன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். இந்த விஷயத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா உரிய முடிவு எடுப்பார்.

    இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.
    Next Story
    ×