search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரி சுதாகர்
    X
    மந்திரி சுதாகர்

    கர்நாடகத்தில் 97 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு: மந்திரி சுதாகர் தகவல்

    கருப்பு பூஞ்சை நோய் எதனால் பரவுகிறது என்பதை கண்டுபிடிக்கும்படி மருத்துவ நிபுணர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். அந்த நிபுணர்கள் அறிக்கை அளித்த பிறகு அதன் அடிப்படையில் உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்.
    பெங்களூரு :

    சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கொரோனா 2-வது அலை தீவிரமாகி வரும் நிலையில் கர்நாடகத்தில் கருப்பு பூஞ்சை நோயும் காணப்படுகிறது. கொரோனா வைரஸ் மூலம் கருப்பு பூஞ்சை நோய் பரவுவது இல்லை. அது தொடர்பாக வெளியாகும் தகவல் தவறானது.

    எச்.ஐ.வி., புற்றுநோய், உடல் உறுப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களை இந்த நோய் தாக்க அதிக வாய்ப்பு உள்ளது. இத்தகையவர்களை மிகுந்த எச்சரிக்கையுடன் கவனித்துக்கொள்ள வேண்டியது அவசியம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு மூக்கு வழியாக இந்த கருப்பு பூஞ்சை நோய் கிருமி புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதன் பிறகு அது கண்ணுக்கு பரவுகிறது. மூக்கில் நுழையும்போது அதை கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கப்பட்டால், அதில் இருந்து மீண்டு விடலாம்.

    இந்த கருப்பு பூஞ்சை நோய் எதனால் பரவுகிறது என்பதை கண்டுபிடிக்கும்படி மருத்துவ நிபுணர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். அந்த நிபுணர்கள் அறிக்கை அளித்த பிறகு அதன் அடிப்படையில் உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நோய் தாக்கப்பட்டால் ஒருவருக்கு 40 முதல் 60 குப்பி ஊசி மருந்து வழங்க வேண்டும். கர்நாடகத்திற்கு 1,050 குப்பி மருந்தை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதில் 450 குப்பிகள் கர்நாடகத்திற்கு வந்துள்ளன.

    மேலும் 20 ஆயிரம் குப்பி மருந்தை ஒதுக்குமாறு மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.

    கர்நாடகத்தில் இதுவரை 97 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு பவுரிங் ஆஸ்பத்திரியில் அந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நோய்க்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும்.

    இவ்வாறு சுதாகர் கூறினார்.
    Next Story
    ×