search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனா பாதிப்பில் இருந்து பசு கோமியம் காப்பாற்றும் - பா.ஜ.க. எம்.பி. பிரக்யா சிங் சொல்கிறார்

    பசுவின் கோமியம் ஒரு உயிர்காக்கும் மருந்தாகும். நாட்டுப்பசுவின் கோமிய சாரம், நம்மை நுரையீரல், கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் என .ஜ.க. எம்.பி. பிரக்யா சிங் கூறியுள்ளார்.
    போபால்:

    மத்தியபிரதேச தலைநகர் போபாலில் நடைபெற்ற, ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அந்த தொகுதி பா.ஜ.க. எம்.பி.யான பிரக்யா சிங் தாக்கூர் கூறியதாவது:-

    ‘பசுவின் கோமியம் ஒரு உயிர்காக்கும் மருந்தாகும். நாட்டுப்பசுவின் கோமிய சாரம், நம்மை நுரையீரல், கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும். எனக்கு நிறைய உடல்நல பிரச்சினைகள் இருந்தன. ஆனால் கோமியத்தை எடுத்துக்கொண்ட பிறகு, நான் கொரோனா வைரஸ் தொற்றுக்குக்கூட எந்த மருந்தையும் எடுத்துக்கொள்ளவில்லை. எனக்கு இந்த தொற்று ஏற்படவில்லை.

    பிரக்யா சிங்


    நான் கோமிய மருந்தை எடுத்துக்கொள்வதால், கடவுள் என்னைத் தொடர்ந்து பாதுகாப்பார் என்று நம்புகிறேன்.’

    இவ்வாறு அவர் கூறினார்.

    ‘ஒரு எம்.பி.யாக பிரக்யா சிங்கின் உதவி மக்களுக்குத் தேவைப்படும் நிலையில், அவரைக் காணவில்லை. அவரை கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும்’ என்று ஒரு காங்கிரஸ் தலைவர் அறிவித்திருந்தார். அதுகுறித்து பிரக்யா சிங், கொரோனா 2-வது அலை காலத்தில் தான் எந்த விளம்பரமும் இன்றி மக்களுக்கு உதவி வருவதாக தெரிவித்தார்.

    மராட்டிய மாநிலம் மலேகானில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பிரக்யா சிங், சர்ச்சையான கருத்துகளுக்குப் பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×