search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    10 ஆயிரம் டன் ஆக்சிஜனை ஏற்றிச்சென்று ரெயில்வே சாதனை

    கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவையான திரவ மருத்துவ ஆக்சிஜனை தேவைப்படும் மாநிலங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ரெயில்வே முக்கிய பங்கு வகித்து வருகிறது.
    புதுடெல்லி:

    ரெயில்வே நிர்வாகம் 10 ஆயிரம் டன் ஆக்சிஜனை ஏற்றிச்சென்று சாதனை படைத்துள்ளது.

    கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவையான திரவ மருத்துவ ஆக்சிஜனை தேவைப்படும் மாநிலங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ரெயில்வே முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் சிறப்பு ரெயில்களில் ஆக்சிஜன் எடுத்துச்செல்லும் பணி, கடந்த மாதம் 19-ந்தேதி தொடங்கியது.

    நேற்று காலையுடன் 10 ஆயிரம் டன் ஆக்சிஜனை ஏற்றிச்சென்று ரெயில்வே சாதனை படைத்துள்ளது. இத்தகவலை ரெயில்வே வாரிய தலைவர் சுனீத் சர்மா தெரிவித்தார். 13 மாநிலங்களுக்கு இந்த ஆக்சிஜன் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

    கோப்புப்படம்


    சுனீத் வர்மா அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:-

    ரெயில்வேயில் நூற்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை 4 லட்சத்து 32 ஆயிரம் ரெயில்வே ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவர்கள் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், ரெயில்வே பாதுகாப்பு படையினர், மருத்துவ ஊழியர்கள் ஆவர்.

    இவர்களில் ஏறக்குறைய அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு விட்டது. மீதியுள்ள 45 வயதுக்கு உட்பட்ட ரெயில்வே ஊழியர்களுக்கு விரைவில் தடுப்பூசி போடுமாறு மாநில அரசுகளை அணுகி உள்ளோம்.

    ரெயில்வேயில், 6 ஆயிரத்து 972 கொரோனா படுக்கைகளும், 573 தனிமைப்படுத்தல் படுக்கைகளும், 296 வென்டிலேட்டர்களும் உள்ளன. 4 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. மேலும் 50 நிலையங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×