search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி மருத்துவ நிபுணர்களுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
    புதுடெல்லி:

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி மருத்துவ நிபுணர்களுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார். அந்தவகையில், நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

    வடகிழக்கு, காஷ்மீர் உள்பட பல்வேறு பிராந்தியங்களை சேர்ந்த டாக்டர்களுடன் அவர் உரையாடினார். கொரோனா சிகிச்சை அனுபவங்களை பிரதமரிடம் டாக்டர்கள் பகிர்ந்து கொண்டனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த தங்களது யோசனைகளையும் தெரிவித்தனர்.
    Next Story
    ×