search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    அடுத்த 3 நாளில் மாநிலங்களுக்கு 51 லட்சம் தடுப்பூசி - மத்திய அரசு சப்ளை

    மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு 20 கோடியே 28 லட்சத்து 9 ஆயிரத்து 250 தடுப்பூசிகளை இலவசமாக வழங்கி உள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் உலகின் மாபெரும் தடுப்பூசி திட்டம் கடந்த ஜனவரி 16-ந் தேதி தொடங்கியது. மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளையும் வழங்கி முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகளுக்கு செலுத்த வைக்கிறது.

    இதுவரை இந்த திட்டத்துக்காக மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு 20 கோடியே 28 லட்சத்து 9 ஆயிரத்து 250 தடுப்பூசிகளை இலவசமாக வழங்கி உள்ளது.

    .இவற்றில் நேற்று முன்தினம் இரவு 7 மணி நிலவரப்படி நாட்டில் 18 கோடியே 43 லட்சத்து 67 ஆயிரத்து 772 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

    மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் 1 கோடியே 84 லட்சத்து 41 ஆயிரத்து 478 தடுப்பூசிகள் கையிருப்பாக உள்ளன.

    அடுத்த 3 நாளில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசானது 50 லட்சத்து 95 ஆயிரத்து 640 தடுப்பூசிகளை வழங்கும். இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×