search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இந்தியாவுக்கு 13 ஆயிரம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கி உதவிய வெளிநாடுகள் - மத்திய அரசு தகவல்

    இந்தியா கொரோனா வைரஸ் 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்கி பரிதவித்து வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிரான இந்த போரில் உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு உதவி புரிந்து வருகின்றன.
    புதுடெல்லி:

    இந்தியா கொரோனா வைரஸ் 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்கி பரிதவித்து வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிரான இந்த போரில் உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு உதவி புரிந்து வருகின்றன.

    அந்த வகையில் சர்வதேச நாடுகளிடம் இருந்து இந்தியா பெற்ற உதவிகளின் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஏப்ரல் 27 முதல் மே 15-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக 13,496 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 11,058 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 19 ஆக்சிஜன் உற்பத்தி அலகுகள், 7,365 வென்டிலேட்டர்கள் மற்றும் சுமார் 5.3 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் உலகளாவிய உதவியாக பெறப்பட்டது.‌

    குறிப்பாக மே 14 மற்றும் 15-ந்தேதிகளில் கஜகஸ்தான், ஜப்பான், சுவிட்சர்லாந்து, கனடா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 500 வென்டிலேட்டர்கள், 300 ஆக்சிஜன் சிலிண்டர்கள் 40 ஆயிரம் ரெம்டெசிவிர் குப்பிகள் மற்றும் முககவசங்கள், கவச உடைகள் பெறப்பட்டன. உலகளாவிய உதவியாக பெறப்பட்ட இந்த வளங்கள் அனைத்தும் தரைவழியாகவும் விமானங்கள் மூலமாகவும் நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×