search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டவ்-தே புயல்
    X
    டவ்-தே புயல்

    குஜராத் கடலோர பகுதியில் இரண்டு நாட்கள் மிகமிக கனமழை பெய்யும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

    டவ்-தே புயல் காரணமாக குஜராத் மாநிலத்தின் கடலோர பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிகமிக கனமழை பெய்யும் என் வானிமை மையம் தெரிவித்துள்ளது.
    அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று குஜராத் நோக்கி நகர்ந்து வருகிறது. புயல் காரணமாக கேரளா, கர்நாடகம் மற்றும் கோவா மாநிலங்களில் கனமழை பெய்கிறது.

    இதேபோல் மகாராஷ்டிரா, குஜராத்திலும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

    இந்த நிலையில இந்திய வானிலை மையம் ‘‘குஜராத்தின் கடலோர பகுதியில் மே 17-ந்தேதி மற்றும் மே 18-ந்தேதி மிகமிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது, சில இடங்களில் மிகத்தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளது. புயல் கரையை கடக்கும்போது, 155 முதல் 165 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்’’ எனத் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×