search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவாக்சின் தடுப்பூசி மருந்து
    X
    கோவாக்சின் தடுப்பூசி மருந்து

    உருமாற்றம் அடையும் கொரோனா வைரஸ்களை அழிக்கும் கோவாக்சின் தடுப்பூசி -ஆய்வு முடிவு

    ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆய்வு இதழில், கோவாக்சின் தடுப்பூசி மருந்து குறித்த ஆய்வுக்கட்டுரை வெளியாகி உள்ளது.
    ஐதராபாத்:

    கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் பல்வேறு தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. எனினும், கொரோனா வைரசானது தொடர்ந்து மரபணு மாற்றம் அடைந்து வருவதால் அவற்றை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசியின் செயல்திறன் தொடர்பாக தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகிறது.

    அவ்வகையில், இந்திய தயாரிப்பான கோவாக்சின் கொரோனா தடுப்பூசியானது, இந்தியாவில் கண்டறியப்பட்ட இரட்டை மாறுபாடு கொண்ட கொரோனா வைரஸ் உட்பட பல வகையான உருமாற்றம் அடைந்த கொரோனாவுக்கு எதிராக நன்கு செயல்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) கூறியிருந்தது.

    இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆய்வு இதழில், கோவாக்சின் தடுப்பூசி மருந்து குறித்த ஆய்வுக்கட்டுரை வெளியாகி உள்ளது. அதில், கோவாக்சின் தடுப்பூசியானது, இந்தியாவிலும் பிரிட்டனிலும் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட இரட்டை மாறுபாடு கொண்ட B.1.617 மற்றும் B.1.1.7 உள்ளிட்ட அனைத்து முக்கிய வளர்ந்து வரும் கொரோனா வகைகளையும் அழிக்கும் என கூறப்பட்டுள்ளது. 

    இந்த மருத்துவ ஆய்வை மேற்கோள் காட்டி, பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் சுசித்ரா எல்லா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 
    Next Story
    ×