search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜீவ் சதவ்
    X
    ராஜீவ் சதவ்

    காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்பி ராஜீவ் சதவ் மறைவு- ராகுல் காந்தி இரங்கல்

    மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சதவ் மறைவுக்கு ராகுல் காந்தி, ரன்தீப் சுர்ஜேவாலா, வேணுகோபால் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    புனே:

    மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சதவ்(வயது 46). காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவருக்கு கடந்த மாதம் 22ம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து புனேயில் உள்ள ஜகாங்கீர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு, அவரது உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டது. உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின. உடல்நிலை மோசமடைந்ததால், வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. எனினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது.

    மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சதவ் மறைவுக்கு கட்சியின் முக்கிய தலைவர்களான ராகுல் காந்தி, ரன்தீப் சுர்ஜேவாலா, வேணுகோபால் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×